கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில்இரு தொழிலாளர்கள்  உயிரிழப்பு

by Editor / 21-08-2024 11:27:57am
 கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில்இரு தொழிலாளர்கள்  உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம்  அருகே உள்ள டி.என்.பாளையத்தில்   கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வெளியூரை சேர்ந்த இரு தொழிலாளர்கள்  உயிரிழந்தனர்.

குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த கோபி அயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(50) மற்றும் கர்நாடக மாநிலம் கார்கேகண்டிகை சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் குவாரில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர்

விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை ஏற்று கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பங்களாபுதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட கல்வாரியின் உரிமம் கடந்த 2015 ஆம் ஆண்டு முடிவடைந்து உள்ள நிலையில் அதனை புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories