தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை

by Admin / 17-05-2026 12:26:56am
 தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் தேனி கோயம்புத்தூர் மதுரை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பதினெட்டாம் தேதி தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும் என்றும் பத்தொன்பதாம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை மழை படிப்படியாக குறைந்து ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளதோடு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இந்த தாழ்வு மண்டல நிலை கொண்டுள்ளது என்றும் அந்தமான் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் வழக்கத்தை விட ஐந்து நாட்கள் முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது. அதன் காரணமாக மே 26 வாக்கில் கேரளாவில் இந்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்த மட்டில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo