கொரோனா தினசரி பாதிப்பு சற்று உயர்வு

by Admin / 16-02-2022 12:03:56pm
கொரோனா தினசரி பாதிப்பு சற்று உயர்வு

கொரோனா தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 27,409 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,615 பேர் பாதிக்கபட்டுள்ளதாக கூறி உள்ளது.
 
இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 27 லட்சத்து 23 ஆயிரத்து 558 ஆக உயர்ந்தது.
தினசரி பாதிப்பு விகிதம் 2.23 சதவீதத்தில் இருந்து 2.45 ஆக அதிகரித்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 3.63 சதவீதத்தில் இருந்து 3.32 ஆக குறைந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 11,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் 2,831, கர்நாடகாவில் 1,405, மிசோரத்தில் 1,616, தமிழ்நாட்டில் 1,325, உத்தரபிரதேசத்தில் 1,189, ராஜஸ்தானில் 1,387, மத்தியபிரதேசத்தில் 1,222 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 304 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 514 பேர் இறந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 5,09,872 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 1,43,451 பேரும், கேரளாவில் 62,681 பேரும் அடங்குவர்.

தொற்றின் பிடியில் இருந்து மேலும் 82,988 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குண மடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 18 லட்சத்து 43 ஆயிரத்து 446ஆக உயர்ந்தது.

தற்போது 3,70,240 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 52,887 குறைவாகும்.

நாடு முழுவதும் நேற்று 41,54,476 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 173 கோடியே 86 லட்சத்தை கடந்துள்ளது.

இதுவரை 75.42 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 12,51,677 மாதிரிகள் அடங்கும்.
 

 

Tags :

Share via