அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்று இருப்பேன்-ரஜினிகாந்த்

by Admin / 17-05-2026 01:35:27pm
அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்று இருப்பேன்-ரஜினிகாந்த்

இன்று ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சமூக  வலைதளங்களில்  பரவி வரும்  விமர்சனங்களுக்கு  பதில் அளிக்கும் வகையில் அவர் தன் நிலை குறித்து விளக்கினார். தேர்தல் முடிவுகளுக்கு பின் தன் மீது  பரப்பப்படும்  விமர்சனங்களுக்கு பதில் அளிக்காவிடில்  அதுவே உண்மையாகிவிடும் என்ற காரணத்தினால் தற்பொழுது விளக்கம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்ததோடு  முன்னாள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை தான் சந்தித்தது 40 ஆண்டு கால நட்பு அடிப்படையில் என்றும் அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்றும் தெரிவித்தார். நான் தற்போது அரசியலில் இல்லை அப்படி இருக்கும்போது முதலமைச்சர் விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை வரவேண்டும் என்றும் பரப்பப்படும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக கேள்வி எழுப்பியவர் நான் ஒருவேளை அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்று இருப்பேன் என்றும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அதில் உறுத்தார். 52 வயதில் மத்தியில் உள்ள சக்தி வாய்ந்த பாஜக தமிழகத்தின் இருவரும் திராவிட கட்சிகளையும் தனி ஆளாக நின்று எதிர்த்து விஜய் இந்த வெற்றியை பெற்றுள்ளதாகவும் இந்த வெற்றி எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர் சாதனையை விட பெரியது என்றும் இதை கண்டு தான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொள்வதாகவும் தெரிவித்த அவர் விஜய் கட்சி தொண்டர்களுக்கு அறிவுரையும் கூறினார். விஜய்க்கு அவ பேரு ஏற்படுத்தாதவாறு ரசிகர்கள் மிகவும் ஜாக்கிரதை ஆகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via
Logo