விநாயகர் சதுர்த்தி விழா 89 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

by Editor / 23-08-2022 09:27:31pm
 விநாயகர் சதுர்த்தி விழா 89 பேருக்கு  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 2 ஆண்டு களுக்கு பிறகு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளை இந்து அமைப்புக்கள் செய்துவருகின்றன.இதில் விழாவை முன்னெடுத்து செல்லும் முக்கிய பிரமுகர்களுக்கும், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தற்போதே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி மாநிலம் முழுவதும் இந்து இயக்கங்களை சேர்ந்த 89 பேருக்கு துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 விநாயகர் சதுர்த்தி விழா 89 பேருக்கு  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
 
Tags :

Share via

More stories

Logo