10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்-வாலிபர் கைது.

by Editor / 30-03-2023 09:12:49am
10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்-வாலிபர் கைது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஊர்மேலழகியான் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தினர் வாழும் பகுதியில் உள்ள 10 வயது சிறுமியை மாடசாமி என்பவரின் மகன் மாணிக்கம் வயது 22 என்பவர் நேற்று முன் தினம் மாலை 6 மணி அளவில் மிட்டாய் வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அதே பகுதியில் உள்ள சமத்துவபுரம் நுழைவாயில் வடபுறம் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. காட்டிற்குள் அழைத்துச் சென்றவுடன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதால் வலி தாங்க முடியாமல் அச்சிறுமி அழுது கொண்டு மெயின் ரோட்டில் வந்த போது அக்கம் பக்கத்தினர் விசாரித்தபோது சம்பவம் அறிந்து  தொந்தரவில் ஈடுபட்ட வரை பிடித்து விசாரித்த போது சிறிய கைகலப்பு ஏற்பட்டு சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக தெரிகிறது உடனடியாக வழக்கு பதிவு செய்த சாம்பவர் வடகரை காவல்துறை விசாரணை செய்து விசாரணையில் என்னை தாக்கியதாக மாணிக்கம் என்பவர் கூறியதால் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் நேற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணிக்கம் என்பவர் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை விட்டு தலைமறைவானதால் என்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டார்கள் இதனால் தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் சாம்பவர் வடகரை காவல்  ஆய்வாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் பேச்சு வார்த்தையில் இரண்டு பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட மாணிக்கம்  என்பவரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது வாக்குறுதி கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் எங்கள் போராட்டம் தொடரும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் தெரிவித்த நிலையில் இன்று காலை மாணிக்கம் போக்‌ஷோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via
Logo