பிரதமர் நரேந்திர மோடி ஆறு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆறு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜூன் 13 14 தேதிகளில் பிரான்ச் நாட்டின் நைஸ் நகருக்கு சென்று அதிபர் இம்மானுவேல் மேக்கரானை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்தும் பேச உள்ளார். அத்துடன் ஸ்டார்ட் அப் மற்றும் முதலீட்டு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் பாரத் த் இன்னோவேட்ஸ் நிகழ்வை இரு தலைவர்களும் கூட்டாக தொடங்கி வைக்கிறார்கள். 14 15 16 ஆகிய நாட்களில் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மற்றும் அதிபர் பீட்டர் பெல் லெகிரினி ஆகியோரை சந்தித்து வர்த்தகம் பாதுகாப்பு ரயில்வே மற்றும் உற்பத்தி துறை சார்ந்த முதலீடுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதியில் பிரான்சின் ஈவியான் நகரின் நடைபெறும் 52 ஆவது ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். தொடர்ந்து ஜூன் 18 அன்று பாரிஸில் நடைபெறும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வான தீவா டெக் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
Tags :



















