பெட்ரோல் பங்குகளில் 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது- மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
பெட்ரோல் பங்குகளில் 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த உள்ளது. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக எரிசக்தி நெருக்கடி உலகளாவிய சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ள நிலையில் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஒரு வாடிக்கையாளர் இருநூறு லிட்டருக்கு மேல் டீசல் வாங்குவதை தடை செய்துள்ளது. உள்ளூர் சந்தையில் எரிபொருள் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் முகமாகவும் பொது விநியோகத்தில் கட்டுப்பாடு இன்றி டீசல் விற்பதை முறைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கோடும் அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags :



















