ஏழ்மையில் உள்ள பெண்களை கடன் வழங்குவதாக கூறி பாலியல் அத்துமீறல் த.வெ.க ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கைது
ஏழ்மையில் உள்ள பெண்களை கடன் வழங்குவதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழக சேலம் ஒன்றியசெயலாளர் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இளம் பெண் ஒருவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். குடும்பச் செலவிற்காக பண நெருக்கடி காரணமாக மளிகை கடை நடத்தி வந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் அந்த பெண்ணுக்கு கடன் பெற்று தந்துள்ளதோடு அவரது ஏழ்மையை பயன்படுத்தி அவரோடு உறவை வளர்த்துக்கொண்டு பாலியல் அத்திமீறல் ஈடுபட்டு அதோடு அவர்களின் அந்தரங்க விஷயங்களை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். திடீரென்று ஒரு நாள் அந்தப் பெண் மணிகண்டனின் செல்போனை பார்த்த பொழுது அதில் 30 க்கு மேற்பட்ட ஏழைப் பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது வீடியோவை மட்டும் அளித்து அவரிடம் இருந்து விலகி இருந்துள்ள இதனை அறிந்த மணிகண்டன் பெண்ணை தொலைபேசியில் அழைத்து ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டியதோடு தன் நண்பர்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ள வற்புறுத்தி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கான பெண் சேலம் மாநகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags :



















