பணமோசடி புகார் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனம் சோதனை

பண மோசடி புகாரில் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனத்தை தொடர்புடைய தமிழகம் முழுவதும் 26 இடங்களில் பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்தின் லட்சுமினராயணன் வேத நாராயணன் மற்றும் ஜனர்தன ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் எட்டாயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகாரில் சென்னை கிண்டி தாம்பரம் செயல்பட்டு வரும் நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்திய அதிகாரி பண பரிவர்த்தனை தொடர்பான கணினி ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்தனர் இதேபோன்று வேலூர் அரக்கோணம் நெமிலி காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் உரிமையாளர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tags :