நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

by Admin / 10-03-2022 11:29:23am
 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

வாங்கி மோசடி செய்த  கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் விஜய் மல்லையா மீது ஒன்பதாயிரம்  கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. 

அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

அவர் வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  இந்த உத்தரவை மீறி, விஜய் மல்லையா, தன் குழந்தைகளின் வங்கி கணக்கிற்கு 10 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். 

இதையடுத்து விஜய் மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு விஜய் மல்லையா நேரில் ஆஜராகலாம் அல்லது அவரது வழக்கறிஞர் வாதாடலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதை மறுபரிசீலனை செய்யக்கோரி விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிக்கப் பட்டது. இந்நிலையில், விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற ஆலோசகரான ஜெய்தீப் குப்தா, தனக்கு வேறு ஒரு வழக்கு உள்ளதால், விசாரணையை ஒத்தி வைக்குமாறு கோரினார். 

இதை ஏற்ற அமர்வு, விசாரணையை இன்று ஒத்தி வைத்துள்ளது. இவ்வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்த போதும், விஜய் மல்லையா ஆஜராகாததால், ஏற்கனவே அமர்வு அறிவித்தபடி இன்று இறுதி தீர்ப்பு கூறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
 

 

Tags :

Share via