ஆசை காட்டி நிர்வாண வீடியோ எடுத்து மோசடி

by Staff / 05-08-2023 02:50:02pm
ஆசை காட்டி நிர்வாண வீடியோ எடுத்து மோசடி

ஹைதராபாத்தில் இளம் பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து வாலிபர் ஒருவர் நிர்வாண வீடியோக்கள் படம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தில்சுக்நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னகேசவா என்ற நபரை சந்தித்துள்ளார். முகத்தில் தாவணி அணிந்து நிர்வாண வீடியோக்கள் செய்து இணையத்தில் போட்டால் ரூ. 10 லட்சம் வரும் என்று ஆசை வார்த்தை கூறி, அவரை பஞ்சாகுட்டாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்துள்ளனர். நிர்வாண வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் தரும்படி அந்த பெண்ணை மிரட்டினார். இதனை அடுத்து இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

 

Tags :

Share via