10 ரூபாய் கொரோனா டாக்டர் - குவியும் பாராட்டுகள்!
கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவ உலகம் பம்பரம் போன்று சுழன்றுகொண்டிருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் நேரம் காலம் பார்க்காமல் பல தியாகங்கள் செய்து கொரோனா நோயாளிகளின் உயிர் காக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
தற்போது சிகிச்சை என்ற பெயரால் பல தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் பணம் வசூலித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா ஆலோசனைகளை ரூ.10க்கு வழங்கி வரும் மருத்துவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சிறிய மருத்துவமனை ஒன்ற நடத்தி வருபவர் மருத்துவர் விக்டர் இம்மானுவேல். தற்போது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையாற்றி வருகிறார். அவதாது சிகிச்சைக்கு வரும் மக்களிடம் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகிறார்.
இதுகுறித்து மருத்துவர் விக்டர் இம்மானுவேல் கூறுகையில், கொரோனாவால் பாதித்தவர்களிடம் இருந்து ரூ.10 மட்டுமே ஆலோசனை கட்டணம் பெறுகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் ஏழ்மையாக இருந்தால், அந்த ரூ.10 கூட வாங்குவதில்லை. கொரோனா தொடர்பான பல்வேறு சோதனைகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. எனது பணிக்காக பல்வேறு தன்னார்வலர்களும் நிதியுதவி செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம், நலன்காக்வை பெரும் துணையாக இருக்கும், மருத்துவர் விக்டர் இம்மானுவேலின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அவர் தனது மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார். அத்துடன், விவசாயிகள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், எல்லைகளில் போராடும் வீரர்கள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளை கணிவுடன் பார்த்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர் விக்டர் அவர்களிடமும் பணம் பெறுவது இல்லை.
Tags :