நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

by Editor / 22-02-2025 09:38:39am
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை வருடாவருடம் வானிலை மாற்றம் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. 

இந்த நிலையில் சுபம்  நிறுவனத்தின் சிவகங்கை கப்பல் போக்குவரத்து சேவை நாகை துறைமுகத்தில் இருந்து தொடங்கியது.83 பயணிகளுடன் சிவகங்கை கப்பல் காங்கேசன்துறை சென்றது.செவ்வாய் கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும் கப்பல் சேவை செயல்படும்.இருவழிக்கு ஒரு நபருக்கு இலங்கை செல்ல 8500 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது

Share via