5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீதுவழக்கு.

by Editor / 08-01-2025 09:56:06am
 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீதுவழக்கு.

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி பல்வேறு பாசன விவசாய சங்கங்கள்  சார்பில் நேற்று (ஜன. 07) பேரணி நடைபெற்றது. இந்த நிலையில் அனுமதி கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது தல்லாகுளம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

 

Tags :  5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீதுவழக்கு.

Share via