ஒரு முட்டாள் தவறான அல்லது எதிர்மறையான பதிவை இடுகிறான் என்பதற்காக நாமும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் ....
சூர்யா அகில இந்திய சூரிய ரசிகர் மன்ற நற்பணி இயக்க கூட்டத்தில்தம் ரசிகர்களிடம் பேசும் பொழுது;
சமூக வலைதளங்களில், ஒரு முட்டாள் தவறான அல்லது எதிர்மறையான பதிவை இடுகிறான் என்பதற்காக நாமும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நாமும் முட்டாளாகவே மாறி விடுவோம் என்றும் எல்லோரையும் மாற்ற வேண்டும் என்றோ அல்லது எல்லா விஷயங்களையும் புரிய வைக்க வேண்டும் என்றோ நினைப்பது மிகவும் கடினமான ஒன்று என்றும் சிலருக்கு நாம் சொல்வது புரியும் பலருக்கு கடைசிவரை புரியாது என்றும் நாம் எப்போதும் நாமாகவே இருப்போம் அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும் என்று கூறியதோடு தேவையற்ற விவாதங்களில் உங்கள் ஆற்றலையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்றும் எதிர்மறை விஷயங்களை எல்லாம் கலந்து விட்டு உங்களுக்கு பிடித்தமான செயல்களில் தினமும் முழு கவனத்துடன் முளைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் ரசிகர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
Tags :
















