விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு 2 பேர் பலி;19 வீடுகள் சேதம்.

by Staff / 22-10-2025 10:43:49am
விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு 2 பேர் பலி;19 வீடுகள் சேதம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்தவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  இருப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.அதிக கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாகவும்  அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருப்பதாகவும் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழையின் அளவு அதிகமாக இருப்பதாகவும் இதில் இரண்டு நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும்  19 குடிசை வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், எந்தவித உயிர் சேதமும் ஏற்படக்கூடாது என  தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும் அந்த உத்தரவை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் எந்தவித  உயிர் சேதமும்  ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு இருப்பதாகவும் இது குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.  மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் ஆய்வு செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் 15 இடங்களில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் அந்த இடத்தில் கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சேதமடைந்து காணப்பட்ட ஆணை குட்டம் அணையின் மதகுகள் சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது என்றும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தை தாண்டி மழை பாதிப்பினால் பராமரிப்பு செய்யப்படும் வீடுகளுக்கும் முழுவதும் சேதம் அடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றார்.

 

Tags : விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு 2 பேர் பலி;19 வீடுகள் சேதம்.

Share via

More stories