இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
ரஷிய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என கீவ்-வில் உள்ள இந்திய தூததரகம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் கிடைக்கக்கூடிய ரெயில்கள் அல்லது வேறு வழிகள் மூலமாக உடனடியாக வெளியேறவும் என தெரிவித்துள்ளது.
Tags :