மகளுக்கு எமனான தாயின் நட்பு

by Editor / 17-12-2021 10:05:11am
மகளுக்கு எமனான தாயின் நட்பு

கோவை சரவணம்பட்டி யமுனா நகரில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் 14 வயது சிறுமியின் உடலானது கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக  சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 13ம் தேதியன்று  சிறுமி காணாமல் போனது குறித்து  மகளிர் காவல்நிலையத்தில்  வழக்கு பதிவு செய்திருந்தது தெரியவந்தது. 

 சிறுமி கொலை தொடர்பாக தாய் கலைவாணி மற்றும் அவரது ஆண் நண்பர் முத்துக்குமாரிடம் காவல்துறையினர் தீவீர் விசாரணை மேற்கொண்டதில்  கடந்த 3 ஆண்டுகளாக முத்துக்குமாரும் கலைவாணியும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துக்குமாரிடமிருந்து கலைவாணி இரண்டரை பவுன் தங்க தங்க நகையை வாங்கியுள்ளார். அதனை  முத்துக்குமார் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  மகளிடம் நகை இருப்பதாகவும் அவளிடம் பேசி வாங்கி தருவதாகவும் கலைவாணி கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பவத்தன்று சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்த சென்ற முத்துக்குமார், அவரிடம் நகையை கேட்டு மிரட்டியதாகவும், மேற்கொண்டு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலுக்கு  முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த முத்துக்குமார் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி அருகிலிருந்த குட்டையில் வீசி விட்டுள்ளார். இவற்றை காவல்துறை விசாரணையில் முத்துக்குமாரே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முத்துக்குமார் மீது போக்ஸோ உட்பட 4 வழக்குகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை  மருத்துவ அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via
Logo