கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக எல்லைப் பகுதியில் கோவை ஆட்சியர் ஆய்வு

by Editor / 17-12-2021 10:21:20am
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக எல்லைப் பகுதியில் கோவை ஆட்சியர் ஆய்வு

 
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுஅங்குள்ள சில பகுதிகளில் வாத்து,கோழி உள்ளிட்டவைகளை சுகாதாரத்துறையினர் தீவைத்து அழித்து வருகின்றனர்.
இந்த நிலையில்  தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை  தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்திரவிட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக கால்நடை பராமரிப்பு துறையினர் சில மாவட்ட எல்லைகளில் கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி,சமையல் எரிவாயு சிலிண்டர்கள், காய்கறிகள், இறைச்சி, முட்டை உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. கேரளாவில் பொருட்களை இறக்கிவிட்டு திரும்பி வாகனங்களை சோதனை செய்யும்  தடுப்பு நடவடிக்கைபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 

 

Tags :

Share via