திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன்? - வைரமுத்து

by Staff / 05-09-2023 10:40:30am
திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன்? - வைரமுத்து

திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், சனாதனம் என்பதும் சனாதன எதிர்ப்பு என்பதும் காலங்காலமான கருத்துருவங்கள். பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என்பது சனாதனக் கருத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு.
திருக்குறளைத்தான் உதயநிதி பேசியிருக்கிறார். திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன்? என கேள்வி எழுப்பியிருக்கிறார். அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்துக்களுக்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories