சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு உடல் நலக்குறைவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சிக்கன் ரைஸ் வாங்கிய கடையை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடை உரிமையாளரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :