கற்றாழை பேட்டரி

by Editor / 19-09-2021 12:00:06pm
கற்றாழை பேட்டரி

சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், 97 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை வெடிக்கும் அபாயம் உள்ளவை. துாக்கி எறியும்போது நிலங்களில் நச்சு பொருட்களை வெளியிடுவதால், நீர் மற்றும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது.இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் மெட்ரிக் டன் எடையிலான பேட்டரி கழிவு உற்பத்தியாகிறது. இது, நாட்டின் மின் கழிவுகளில், 82 சதவீதம். கல்லீரல் சிரோசிஸ் நோயாளிகள் ஆண்டுக்கு, 10 லட்சம் பேர் புதிதாக கண்டறியப்படுகின்றனர்.

இவர்களில், 69 சதவீதம் பேர் இது போன்ற கழிவுகளை துாக்கியெறியும் பகுதிகளுக்கு அருகில் வசிக்கின்றனர். என்ன தொழில்நுட்பம்?கற்றாழை (அலோ வேரா) சாற்றில் தயாரிக்கப்பட்ட பேட்டரி என்பது இன்றைய தேவைக்கான ஒரு தயாரிப்பு மட்டுமல்ல, இது ஒரு சூழல் நட்பு அணுகுமுறை. பேட்டரிகளின் நச்சு மற்றும் அபாயகரமான ரசாயனங்களை மூலிகை எலக்ட்ரோலைட் உதவியால் மாற்றியுள்ளனர். இவை வெடிக்கும் அபாயம் இல்லாதவை.

உலர்ந்த நிலையில் இருந்து ஈரப்பதத்தில் இருந்து வெப்பம் முதல் குளிர் வரை எந்த நிலையிலும் வளரும். 10 - -50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வளர்க்கலாம்.இது மலிவான மூலப்பொருள். குறைந்த செலவில் மற்றும் அதிக ஆற்றலுடன் மின்சாரம் உருவாக்க முடியும். 2 ஏக்கர் நிலத்தில் 30 டன் கற்றாழை வளரும்.

72 ஆயிரத்துக்கும் அதிகமான பேட்டரிகளை உருவாக்க முடியும். 10 வாரங்களில் மீண்டும் வளரும்.மண்ணில் எளிதில் சிதைந்து அதன் மூலம் முக்கிய ஊட்ட சத்துக்களை பெறலாம். இதில் எந்த தீங்கு விளைவிக்கும் பொருளும் இல்லை, எனவே அபாயமில்லாதது. விலை குறைவுகடைகளில் கிடைக்கும் பேட்டரிகளை விட 10 சதவீதம் விலை குறைந்தது.

அவற்றை விட 1.5 மடங்கு அதிகம் உழைக்கக்கூடியது. எடை குறைவானது, ஆபத்து இல்லாதது.ரிமோட் கண்ட்ரோல், கடிகாரம், ரேடியோ, ப்ளாஷ் லைட், ரூம் பிரஷ்னர், டிஜிட்டல் கேமரா, எம்பி 3 பிளேயர் ஆகியவற்றில், இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில், ஆண்டுக்கு 5,800 கோடி பேட்டரிகள் உபயோகிக்கப்படுகின்றன. இந்த பேட்டரிகளை உபயோகப்படுத்துவதால் இறக்குமதி செலவுகளை பெரிய அளவில் குறைக்கலாம்.

 

Tags :

Share via