பிக் பாஸ் நிகழ்ச்சியில்டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து ?

by Editor / 19-09-2021 12:05:44pm
பிக் பாஸ் நிகழ்ச்சியில்டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து ?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ள இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.இந்த நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களில் ஒருவராக டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது யூடியூபில் வந்த அவரிடம் ரசிகர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் இருப்பது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். ஏனென்றால் என்னால் ஒரு நிமிடம் கூட போன் இல்லாமல் இருக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் என்னுடைய குழந்தைகளையும் மனைவியையும் பார்க்காமல் இருக்க முடியாது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via