பொறுப்பேற்றுக்கொண்ட நடிகை குஷ்பு

by Staff / 28-02-2023 03:43:04pm
பொறுப்பேற்றுக்கொண்ட நடிகை குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு மகளிர் ஆணைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் மோடியின் ஆசியுடன் இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். எங்கள் தேவிகளின் நலன்கள் எல்லாத் துறைகளிலும் பாதுகாக்கப்பட உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் ஆதரவையும் நான் விரும்புகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகை குஷ்பு திமுக, காங்கிரஸ் கட்சிகளை தொடர்ந்து கடந்த 2020 முதல் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் குஷ்பு செயல்பட்டு வருகிறார். 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

 

Tags :

Share via