ஆப்கானிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 40 பேர் உயிரிழப்பு

by Editor / 29-07-2021 07:15:58pm
ஆப்கானிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 40 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காம்திஷ் என்ற பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெள்ளத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவில் ஏற்பட்ட இந்த கடுமையான வெள்ளத்தில் 80 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த மீட்பு படையினர், 80 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories