ராகுல் காந்தி மனு இன்று விசாரணை

by Staff / 29-04-2023 11:20:20am
 ராகுல் காந்தி மனு இன்று விசாரணை

மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo