முன்னாள் துணை முதல்வரின் மண்டை உடைப்பு

by Staff / 29-04-2023 11:16:33am
முன்னாள் துணை முதல்வரின் மண்டை உடைப்பு

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 10ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில், அங்குள்ள தும்கூர் தொகுதிக்குட்பட்ட கொரட்டகெரே கிராமத்தில் காங்., மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான டாக்டர் பரமேஸ்வரா வெள்ளிக்கிழமை பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சமயத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் அவரது மண்டை உடைந்தது. பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அவரை கட்சியினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo