மதுரையிலிருந்து காசிக்கு மஹாளய அமாவாசையை முன்னிட்டு விமான சுற்றுலா

by Editor / 24-08-2022 10:28:18am
மதுரையிலிருந்து காசிக்கு  மஹாளய அமாவாசையை முன்னிட்டு விமான சுற்றுலா

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( IRCTC)  மதுரையிலிருந்து பல்வேறு ஆன்மீக  சுற்றுலாக்களை நடத்தி வருகிறது.புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் 6 நாட்கள் சுற்றுலா நடத்த இருக்கிறது. வரும் செப்டம்பர் 24 ல் மதுரையிலிருந்து துவங்குகிறது.விமான கட்டணம் உள்ளூர் போக்குவரத்து தங்குமிடம், உணவு,  காப்பீடு உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 39,300 கட்டணமாகும். மேலும் விவரங்களுக்கு  8287931977 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதளம் மூலமும்   பதிவு செய்து கொள்ளலாம்.

 

Tags :

Share via