2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அரசின் திட்டம்

by Editor / 07-08-2024 01:48:28pm
2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அரசின் திட்டம்

இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் 2024-25 மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது குறித்து மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், “2 ஆண்டுகளில் 2 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே புதிய திட்டத்தின் நோக்கம். அதற்கான நடவடிக்கையில் விரைந்து ஈடுபட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

 

Tags :

Share via