புதிய பாலம் கட்ட அரசு ஒப்புதல்
குஜராத்தில் வதோதரா-ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி கடந்த 9-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இதே இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்காக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த பாலத்தை 18 மாதங்களில் கட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
Tags :



















