141 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 141 பொறியியல் கல்லூரிகளுக்கு, விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு கல்வியாண்டு(2025-26) அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 141 கல்லூரிகளுக்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :