நிமிஷா மரண தண்டனையை நிறுத்த நடவடிக்கை: ஒன்றிய அரசு

கேரள செவிலியருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கேரள செவிலியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், மரண தண்டனையை நிறுத்த எடுத்த நடவடிக்கைகளை வெளிப்படையாக தெரிவிப்பதில் சிக்கல் உள்ளது என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :