இளம்பெண் தற்கொலையில் சந்தேகம் - பெற்றோர் புகார்..

by Staff / 27-05-2024 12:50:19pm
இளம்பெண் தற்கொலையில் சந்தேகம் - பெற்றோர் புகார்..

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி (19) என்ற இளம்பெண்ணிற்கும், ஜெயகணேஷ் (24) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 24 தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று (மே 26) வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த சரஸ்வதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனது மகள் திருமணமாகிய சில நாட்களில் உயிரிழந்து இருப்பதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் ஜெயகணேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via