தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயகும்பாபிஷேக விழா - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தற்போது கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த 3-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த கும்பாபிஷேக நிகழ்வானது 6 கால யாக சாலை பூஜைக்கு பிறகு தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், இந்த யாக சாலை பூஜையின் போது, 91 ஹோம குண்டங்களில் 250 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க மூன்று நாட்கள் 5 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில், இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு தற்போது வெகு விமர்சையாக கும்பாபிஷேக நிகழ்வானது நடைபெற்றது.
அதாவது, 9 நிலைகள் கொண்ட 175 அடி உயரமுள்ள பிரம்மாண்ட ராஜகோபுரத்தின் மேல் உள்ள கலச கும்பத்தில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்று நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள காசி விஸ்வநாதர், ஸ்ரீஉலகம்மன், முருகர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ள கருவறையின் மேல் பகுதியில் உள்ள விமானங்களிலும் புனித நீரானது ஊற்றப்பட்டு, அந்த புனித நீரை 33 கம்பரசர் பைப்புகள் மூலம் ஆலயத்தின் முன்பு குவிந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மீது தெளிக்கும் நிகழ்வும் அரங்கேறியது.
குறிப்பாக, 19 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவிற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அதாவது, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களை சேர்ந்த 1,090 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கோவில் ரத வீதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க ஃபேஸ் டிடக்க்ஷன் கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது இந்த கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வில் அறங்காவலர் குழுத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்குழு உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர்,எஸ்.பி.அரவிந்த்,இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி,எம்.பி,எம்.எல்.ஏக்கள் நன்கொடையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Tags : தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயகும்பாபிஷேக விழா - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.