சுற்றுலாப்பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட பாஜகமாநிலச் செயலாளர் கோரிக்கை.
குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் போதிய அளவு பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி, பெண்கள் உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்க்கு மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு தமிழ்நாடு பாஜகமாநிலச் செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை.
தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் சீசன் காலமாகும் இந்த சீசன் காலங்களில் தமிழக மட்டுமின்றி வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவி கரைப்பகுதியில் உள்ள கடைகளில் தேவையான பொருட்கள் வாங்குவதும் கோயில் சன்னதி பஜாரின் உள்ள கடைகளில் தங்கள் வீடுகளுக்கு தேவையான சிப்ஸ் இனிப்புகள் விளையாட்டு சாமான்கள் வாங்கி செல்வது வழக்கம் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏல விடுவது வழக்கம் இதன் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கொடுக்கும் முக்கிய பகுதி குற்றாலம் ஆகும் தற்போது தென்காசி மாவட்டத்தில் மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என வானிலை அறிக்கை தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது தற்போது சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆரம்பிக்கும் நிலையில் சில முன்னேற்பாடு பணிகள் தற்போது தான் நடந்து கொண்டிருக்கிறது சீசன் ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்னதாகவே இதையெல்லாம் ஆரம்பிக்காமல் தண்ணீர் விழும் சமயத்தில் வேலைகள் செய்யும்போது அவை முழுவதும் பழுதாகி காணப்படும்.
சுற்றுலா பயணிகளுக்கு போதிய அளவு தரமான குடிநீர் குழாய்களை ஆங்காங்கே ஏற்படுத்தி தர வேண்டும்
பெண்கள் உடை மாற்றும் அறை இடிந்து விழுந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது தற்போது இப்பொழுதுதான் அந்த பணிக்கான பழைய கட்டிடத்தை இடித்து போடப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது பல்லாயிரம் மக்கள் வந்து செல்லும் கார் பார்க்கிங்கில் குறைந்த அளவே வாகனம் நிறுத்தும் இடம் தான் உள்ளது
குற்றாலம் மெயின் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கார்கள் நிறுத்துமிடம் எல்லாம் கடைகள் மயமாக மாறி உள்ளது இதனால் குற்றாலம் மெயின் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்துநெருக்கடியால் சிக்கி தவிக்கிறது கார் பார்க்கிங் பகுதியில் சுற்றுலா பயணிகள் பணம் கொடுத்து விட்டு தான் மேலே செல்கிறார்கள் அப்படி செல்லும் சமயத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதி இல்லை என குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டாக உள்ளது வாகனம் நிறுத்துவதற்கு இடம் இல்லாத பட்சத்தில் கார் பார்க்கிங் செய்வதற்கு நாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என அவர்கள் ஆதங்கத்துடன் பேசி வருவதையும் காணமுடிகிறது இப்போதே இப்படி என்றால் சீசன் ஆரம்பிக்கும் பொழுது சனி ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் எத்தனை வாகனங்கள் வரும் அவை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை இதனால் தினந்தோறும் வாகன நெருக்கடி சந்திக்கும் அவலம் காணப்படும் இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும்.
இதேபோல் ஐந்தருவி பகுதிகளிலும் வாகனம் நிறுத்துமிடம் தனியார் இடத்தில் செயல்படுகிறது சுற்றுலா பயணிகள் வாகனம் நிறுத்துவதற்கு ஏதுவாக அரசிடம் ஒதுக்கி தரவேண்டும் தண்ணீருக்காக தோண்டப்பட்ட பகுதிகளை வாகனங்கள் ஏதும் சிக்கி விடாமல் இருக்க வேண்டி இரண்டு புறங்களிலும் தரமான சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.என அந்தமனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags : சுற்றுலாப்பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட பாஜகமாநிலச் செயலாளர் கோரிக்கை.