வனவிலங்குகள் நடமாட்டமுள்ள பகுதியில் சொகுசு விடுதிகள்

by Editor / 21-08-2022 10:03:21am
வனவிலங்குகள் நடமாட்டமுள்ள பகுதியில் சொகுசு விடுதிகள்

தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட தனியார் நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தனியார் ரிசார்ட் நிர்வாகம் மூலம் கட்டப்பட்டுள்ள நீர்வீழ்ச்சி அகற்றும் பணியானது நடைபெற்றுவருகிறது.

  மேக்கரை பகுதியில் மலை உச்சியில் ஆதினம் இடத்தில் கட்டப்பட்டு வனப்பகுதியில் ஓடிவரும் ஓடையை மறித்து அருவியை தாயர் செய்து கட்டணம் வாங்கி சுற்றுலாப்பயணிகளை குளிக்க வாகனங்கள் மூலம்  அழைத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது.இந்த பகுதியில் அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றிட சென்றபொழுது, அதிகாரிகளுடன் தனியார் ரிசார்ட் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, அந்த நீர்வீழ்ச்சியை சிறிதளவு அப்புறப்படுத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர்.

 மேக்கரை பகுதியில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளையும் முழுமையாக அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், ஒருவருக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என மற்ற நீர்வீழ்ச்சிகளை கட்டி உள்ளவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 மேலும், அந்த ரிசார்ட் பகுதி வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகவே காணப்படுகிறது. உதாரணமாக, அந்த ரிசார்ட் பகுதியை சுற்றி அதிக அளவில் யானை நடமாட்டங்கள் உள்ளது.யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வராமலிருக்க மின்வேலிகளையும் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டிற்கு அளவுக்கு அதிகமான பொதுமக்கள் வந்து செல்வதால் வன உயிரினங்கள் ஊருக்குள் வரும் அபாயம் ஏற்படுவதாகவும், மேலும், ரிசார்ட்டில் தங்கி உள்ளவர்கள் மது பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை வனப்பகுதிகளுக்குள் வீசி செல்வதால் வன உயிரினங்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவதாகவும் வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பலமுறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் வன ஆர்வலர்கள்.

 

Tags :

Share via