பழமுதிர் சோலை முருகன் கோவிலில் 108 காவடிகள் எடுத்து 5 நாட்கள் நடைபயணமாக வந்து பக்தர்கள் வழிபாடு.
மேலூர் அருகே பழமுதிர் சோலை முருகன் கோவிலில் 108 காவடிகள் எடுத்துவந்து பக்தர்கள் வழிபாடு: 5 நாட்கள் நடைபயணமாக வந்து சிறப்பு வழிபாடு செய்த முருகன் பக்தர்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே முருகப் பெருமானின் ஆறாவது படை வீடாக போற்றப்படக்கூடிய பழமுதிர் சோலை முருகன் கோவிலுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பையூரைச் சேர்ந்த திருமுருகன் வார வழிபாட்டு குழுவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த 08ஆம் தேதி, 108 மயில் காவடி எடுத்து நடைப்பயணமாக பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர்.
தொடர்ந்து, 6வது நாள் பயணமாக பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு வந்தடைந்த அவர்கள், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.அவர்களுக்கு திருக்கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது...
Tags : பழமுதிர் சோலை முருகன் கோவிலில் 108 காவடிகள் எடுத்து 5 நாட்கள் நடைபயணமாக வந்து பக்தர்கள் வழிபாடு.