அரசு பள்ளிக்கு சென்று மாணவ,மாணவிகளை சந்தித்த நடிகர் அர்ஜுன்.

by Editor / 14-08-2024 08:10:23am
அரசு பள்ளிக்கு சென்று மாணவ,மாணவிகளை சந்தித்த நடிகர் அர்ஜுன்.

திருமயம் அருகே உள்ள ராராபுரம் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு திடீரென அரசு பள்ளிக்கு சென்று மாணவ,மாணவிகளை சந்தித்த நடிகர் அர்ஜுன் வரவேற்பு கொடுத்த கிராம மக்கள் 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராராபுரம் கிராமத்தில் அமைந்துள்ள திருவேட்டை அழகர் கோவில் ஆடி திருவிழா ஒன்பதாம் மண்டகப்படியை முன்னிட்டு நடிகர் அர்ஜுன் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார். நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையாவின் மகனுக்கும் நடிகர் அர்ஜுன் மகளுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகரும் தம்பி ராமையாவின் சம்மந்தியுமான
அர்ஜுன் ராராபுரம் கிராமத்திற்கு இன்று வருகை தந்த நடிகர் அர்ஜுனை கிராம மக்கள் அன்போடு வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ராராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள்  உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர். பின்னர் மதிய உணவை முடித்துக் கொண்டு ரா ராபுத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு சென்றார். அங்கு அவருக்கு மாணவ, மாணவிகள் கைத்தட்டி வரவேற்பளித்தனர். பின்னர் அரசு பள்ளிக்குள் சென்ற நடிகர் அர்ஜுன், மற்றும் தம்பி ராமையா, அர்ஜுன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அவரது கணவரும் நடிகருமான உமாபதி ஆகியோருக்கு பள்ளி சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் தம்பி ராமையா மாணவ, மாணவிகளிடம் திருக்குறள் சொல்லி அதற்கான விளக்கத்தையும் அது தொடர்பான கதையையும் மாணவ மாணவிகளுக்கு கூறினார். பின்னர் நடிகர் அர்ஜுன் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். கோவில் திருவிழாவிற்காக சென்ற நடிகர் அர்ஜுன்  மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசியது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Tags : அரசு பள்ளிக்கு சென்று மாணவ,மாணவிகளை சந்தித்த நடிகர் அர்ஜுன்

Share via
Logo