திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் சிறப்பு தரிசனம் டிக்கெட் ரத்து

by Editor / 28-02-2022 09:16:36am
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் சிறப்பு தரிசனம் டிக்கெட் ரத்து

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்வாமி திருக்கோவிலில் பக்தர்கள் பெரிய பெருமாளை தரிசிக்க தற்பொழுது 250 ரூபாய் மற்றும் 50 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணம் மற்றும் விரைவு தரிசன டிக்கெட் வசூலிக்கப்பட்டு வருகிறது 

இந்த இரு கட்டண டிக்கெட் முறையை ரத்து செய்து மாற்றாக அனைவருக்கும் ஒரே மாதிரியாக செல்ல 100 ரூபாய் மதிப்புள்ள ஒரே கட்டண சீட்டு முறை வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப் படுகிறது.மேலும் வழக்கம்போல் பக்தர்கள் இலவச தரிசனம் மூலம் பெருமாளே தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு...

 

Tags : Special Darshan tickets canceled at Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam, Trichy

Share via