ஹிமாச்சல் பிரதேசத்தை புரட்டிப் போடும் கனமழை: கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் பலி.

ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பல இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. சில மணி நேரத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளம் கரைபுரண்டது. குறிப்பாக காங்ரா, மாண்டி, ஹமிர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மாண்டி, சம்பா, காங்ரா மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், நிலச்சரிவில் சிக்கியுமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19 பேர் பலியாகியுள்ளனர்., 9 பேர் காயமடைந்துள்ளனர்,6 பேர் காணாமல் போயுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags : Heavy rains lash Himachal Pradesh: 19 people killed in last 24 hours.