நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 21 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து 5 பேர் உயிரிழப்பு..?

by Editor / 12-10-2023 09:40:06am
நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 21 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து 5 பேர் உயிரிழப்பு..?

டெல்லி ஆனந்த விகாரில் இருந்து அசாமின் கவுகாத்திக்கு செல்லும் வடகிழக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் பீகார் மாநிலம் ரகுநாத் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.நேற்று  இரவு 9 மணி அளவில் வேகமாக சென்று கொண்டிருந்த இந்த ரயிலின் ஆறு ஏசி பெட்டிகள், உட்பட 21 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளாத்தில் கவிழ்ந்து கிடந்தன. இதில் ஏராளமான பயணிகள் காயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து  தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துவிட்டதாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகும் ரயில்வே தரப்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், விபத்து காரணமாக ஏராளமான ரயில்கள் அங்கிருந்து நகர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான ரயிலில் பயணிகளை ஏற்றி  செல்ல மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு ரயில்வே அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்து தொடர்பாக அவசரத் தொடர்புக்கு வடக்கு ரயில்வே ஹெல்ப்லைன் எண்களைப் பகிர்ந்துள்ளது. ஹெல்ப்லைன் எண்கள்: PNBE - 97714 49971, DNR - 89056 97493, ARA - 83061 82542, COML CNL - 77590 70004 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 

 

Tags : நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 21 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து 5 பேர் உயிரிழப்பு..?

Share via