ஆன்லைன் சூதாட்டத்தால் 3பேர் தற்கொலை
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி ஆனந்த் (38) - இந்திரா (38). இவர்களுக்கு 4 வயதில் மகன் இருந்தான். மூவரும் நேற்று வீட்டில் சடலமாக கிடந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரித்ததில் மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஆனந்த் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவில் பணத்தை இழந்த ஆனந்த், நிதி நெருக்கடியில் சிக்கி தவித்ததால் இம்முடிவை எடுத்ததாக தெரிகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :