இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

by Staff / 09-04-2024 01:05:54pm
இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பாண்டி பஜாரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் போதைப்பொருள் கடத்தல் மாஃபியா ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்து சமீபத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி இயக்குநர் அமீர் விளக்கம் அளித்திருந்தார்.

 

Tags :

Share via