பெரம்பலூரில் வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு- பொதுமக்கள் அதிர்ச்சி

by Writer / 25-01-2022 06:03:52pm
பெரம்பலூரில் வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு- பொதுமக்கள் அதிர்ச்சி

பெரம்பலூர் அருகே சுப்பிரமணி என்பவர் வீட்டின் மேற்கூரையில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் வீட்டினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடும் பயிற்சி மையத்தில் இருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்து வந்ததாக பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர் நேற்று காலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்து வந்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர் 


சமீபத்தில்  புதுக்கோட்டை அருகே குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த நிலையில் பெரம்பலூரில் வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via