கவின் குடும்பத்திற்கு பாஜக தலைவர் நயினார் ஆறுதல். 

by Staff / 31-07-2025 10:43:08am
கவின் குடும்பத்திற்கு பாஜக தலைவர் நயினார் ஆறுதல். 

திருநெல்வேலியில் சகோதரியை காதலித்த மென்பொறியாளர்  கவின் (24) என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்டார் அவரது வீட்டிற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதேபோல், கவின் வீட்டிற்கு, கனிமொழி எம்பி, நேரு உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் சென்றுள்ளனர். அங்கு, கவினின் தாய் மற்றும் தந்தைக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுர்ஜித் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுஅவரது தந்தை சிறப்புக் காவல் படை உதவி ஆய்வாளர் சரவணனும்  கைது  செய்யப்பட்டுள்ளார்.
 

 

Tags : கவின் குடும்பத்திற்கு பாஜக தலைவர் நயினார் ஆறுதல். 

Share via