4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாங் புயல் தீவிரமடைந்து கனமழை வெளுத்து வாங்கி வருவதால் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறும் அரசு தெரிவித்துள்ளது.
Tags :



















