காங்கிரஸ் வேட்பாளர் 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் வேட்பாளர் ஒருவர் வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கான்கேர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சங்கர் துருவாவை பாஜக வேட்பாளர் ஆஷா ராம் நெத்தம் வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சங்கர் துருவா 67,964 வாக்குகளும், ஆஷா ராம் நேதம் 67,980 வாக்குகளும் பெற்றனர். சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த சங்கர் துருவா கண்ணீர் விட்டார்.
Tags :