திருநெல்வேலி கத்தரி வெயிலை சமாளிக்க போலீசாருக்கு சார்ஜபிள் மின்விசிறி

தமிழகத்தில் கத்திரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்கினி நட்சத்திரம் தொடங்கி விட்டதால், தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் கோடை வெப்பத்தை தாக்கு பிடிக்கும் வகையில் நெல்லை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்ஜபிள் மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு சார்ஜபிள் மின்விசிறியை வழங்கினார்.
Tags : போலீசாருக்கு சார்ஜபிள் மின்விசிறி