63 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தகவல்.

by Editor / 31-12-2022 08:42:58am
 63 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தகவல்.

அமராவதியில் ஆந்திர பிரதேச நீதித்துறை அகாடமி திறப்பு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் நீதிமன்றங்களில் 63 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் வழக்கறிஞர்கள் கிடைக்காமல் காலதாமதம் ஆகிறது. 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ஆவணங்கள் கிடைக்காமல் தாமதப்படுத்தப்படுகிறது. இந்த எண்ணிக்கை தேசிய நீதித்துறை தரவு கட்டத்தின் தகவலின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவ்வாறான விடயங்கள் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. மாவட்ட நீதிமன்றங்கள் நீதித்துறையின் முதுகெலும்பு மட்டுமல்ல, பலருக்கு நீதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் முதல் வழி என்று கூறினார்.

 

Tags :

Share via